

பெட்டாலிங் ஜெயா மே 10-
பெரிஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் ஹரிராயா பெருநாள் பொது உபசரிப்பு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பெரிஸ்மா தலைவர் டத்தோ ஜஹாவர் அலி தலைமையில் நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி, மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ என் கோபாலகிருஷ்ணன், உதவித் தலைவர் திருநாவுக்கரசு, துணை செயலாளர் கானா, மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் முத்துசாமி, நடப்பு செயலாளர் சண்முகம், மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் இராஜசேகரன், HRD Corp தலைமை செயலாளர் டத்தோ வீரா சாகுல் ஹமீது உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மாலை 5.00 மணிக்கு தொடங்கிய விருந்து நிகழ்ச்சி இரவு 10.00 மணிவரை நீடித்தது.
பல வகை சுவையான உணவுகள் இந்த விருந்து நிகழ்ச்சியில் பரிமாறப்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது