
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 12-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பானின் வெற்றியானது ஓற்றுமை அரசாங்கம் வலிமையாக இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது என்று ஜசெக தலைமை செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்
மக்களின் நம்பிக்கையை இது காட்டுகிறது என்பதற்கு இந்த வெற்றி ஒரு அடையாளம்.
அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றின.
மேலும் இம்முறை அனைத்து இனங்களின் ஆதரவு அதிகரித்துள்ளது என அவர் சொன்னார்.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவ் நேற்று 3,869 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

