பக்கத்தானின் வெற்றி கோலகுபு பாரு மக்களுக்கு ஒரு இனிமையான வெற்றி!பவானி சாசா புகழாரம்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு மே 12-
நான்கு முனை போட்டியில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவ் 3,869 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இவரின் இந்த வெற்றியானது கோலகுபு பாரு மக்களுக்கு ஒரு இனிமையான வெற்றியாக அமைந்துள்ளது என்று பேராக் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி சாசா புகழாரம் சூட்டினார்.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சாக் தாவோவை 14,000 வாக்குகள் பெற்று 3,869 பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருப்பது ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

பக்காத்தான் ஹராப்பானின் வெற்றியானது ஒற்றுமை அரசாங்கத்தின் ஐக்கியத்தை பிரதிபலிக்கிறது.

ஒற்றுமை அரசாங்கம் நாட்டை சரியான உறுதியான சூழல் மற்றும் பாதையில் வழிநடத்துகிறது என்பதற்கு இது ஒரு அடையாளம்.

மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பாக் சோக் தாவ் சிறந்த
முறையில் சேவையாற்றுவார்.

கடுமையான பிரச்சாரங்களுக்கு மத்தியில் கோலகுபு பாரு வாக்காளர்கள் பக்கத்தான் ஹராப்பான் மீது நம்பிக்கை வைத்திருப்பது பாராட்டுக்குரியது என அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles