


செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலகுபு பாரு மே 12-
உலகில் வாழும் அனைத்து அன்னையர்களுக்கும் முதலில் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்வதாக மனிதவள அமைச்சரின் சிறப்பு அதிகாரி டிக்காம் லூர்ட்ஸ் தெரிவித்தார்.
அதேசமயம் மிக கடுமையான உழைப்புக்கு கிடைத்த பரிசாக கோலகுபு பாரு வெற்றி விளங்குகிறது என்றார்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தலைமையில் கடந்த மூன்று வாரங்களாக கோலகுபு பாருவில் முகமிட்டு பக்கத்தான் ஹராப்பான் வெற்றிக்கு மிகக் கடுமையாக உழைத்தோம்.
என்னுடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்கள்.
கடும் மழை மற்றும் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் வியர்வை சிந்தி கடுமையாக உழைத்தோம்.
இந்த உழைப்புக்கு கிடைத்த பரிசுதான் பக்கத்தான் ஹராப்பானின் மகத்தான வெற்றி.
கோலகுபு பாரு இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு முழுமையாக ஆதரவு வழங்கியுள்ளனர்.
அதேசமயம் சீனர், பூர்விக குடிமக்களும் அதிக அளவில் ஆதரவு வழங்கிருப்பது பாராட்டுக்குரியது.
இம்முறை கணிசமான அளவு மலாய் வாக்காளர்கள் ஆதரவு வழங்கியிருப்பது உற்சாகத்தை தருகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் வலிமையானது என்பது இந்த தேர்தல் முடிவு புலப்படுத்துகிறது என்றார் அவர்.
ஜசெக வேட்பாளர் பாக் சோக் தாவ் தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றுவார். அவருக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் என்று டிக்காம் லூர்ட்ஸ் தெரிவித்தார்.

