பெண் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான கடனுதவி – ஹிஜ்ரா

ஷா ஆலம், மே 13 – சிலாங்கூர் மாநிலத்தில் சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான மூலதன கடனுதவியை யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வழங்குகிறது.

நியாகா டாருல் எஹ்சான் (நாடி) திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்புவோர் https://mikrokredit.selangor.gov.my என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறவாரியம் தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

இந்த உதவி குறிப்பாக சிலாங்கூர் டாருள் ஏஹ்சானில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு டாருல் ஏஹ்சான் வணிகக் கடனுதவித் திட்டம் (நாடி) 50,000 வெள்ளி வரை நிதியுதவி வழங்குகிறது.

Selangir kini

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles