
கோலாலம்பூர் மே 13-
மலேசியாவில் அனைத்து இனங்களின் “நியாயமான பிரதிநிதித்துவத்திற்காகவும் அதோடு கூட்டாட்சி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைப் பாதுகாப்பதற்கும்” பிகேஆர் தொடர்ந்து போராடும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
மலேசியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாக இருந்தாலும், மற்ற சமூகத்தினரின் உரிமைகளை மறுக்க முடியாது.
“பிகேஆர் அரசியலமைப்பின் கொள்கைகளை தொடர்ந்து நிலைநிறுத்தும்.
தேசம் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் இருக்க, ஒவ்வொரு இனத்திற்கும் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.
கோலா குபு பாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் இனம் மற்றும் மத பிரச்சனைகளை தொடர்ந்து விளையாடி வருவதாக குற்றம் சாட்டிய அவர், பிகேஆர் ஒவ்வொரு மலேசியரின் உரிமைகளையும் பாதுகாக்கும் என்றார்.
மலேசிய கினி

