இந்தியர்களின் ஆதரவு70.2 % உயர்வு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது!கவுன்சிலர் புவனேஸ்வரன்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு மே 12-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பானுக்கு இந்தியர்களின் ஆதரவு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சிலாங்கூர் மாநில தேர்தலில் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பானுக்கு 60 விழுக்காடு இந்தியர்கள் வாக்குகள் கிடைத்தன.

ஆனால் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பானுக்கு 70.2 விழுக்காடு இந்தியர்கள் ஆதரவு வழங்கினர்.

சீனர்கள் ஆதரவு 85 விழுக்காட்டில் இருந்து 88 விழுக்காடு, மலாய்க்காரர்கள் ஆதரவு 39 இல் இருந்து 42 விழுக்காடு மற்றும் பூர்விக குடிமக்கள் ஆதரவு 60 இல் இருந்து 63 விழுக்காடு உயர்ந்துள்ளது பாராட்டுக்குரியது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles