
சுங்கை சிப்புட் – பேரா மாநில சட்டமன்றங்களில் ஒன்றான ஜாலோங் சட்டமன்ற சேவை மையம் தொடந்து தனது வற்றாத சேவையினை தனது கிராமத்தலைவர்கள், நகராண்மைக்கழக உறுப்பினர்கள் மற்றும் ஜ.செ.க.வின் கிளைத் தலைவர்கள் வாயிலாக தொடர்ந்து வழங்கி வருகிறது என்று ஜாலோங் சட்டமன்ற உறுப்பினரும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான மான்புமிகு லோ சீ யீ அவர்களின் இந்தியர் நலப்பிரிவு அதிகாரியும் கோலாகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினருமான திரு. கோபி அவர்கள் கூறினார்.
ஜாலோங் சட்டமன்றத்திற்குட்பட்டு அறியப்படும் அல்லது தெரிவிக்கப்படும் இந்தியர் சார்ந்த விடயங்களை, சமூக சேவையாளரும், ஜ.செ.க. சிரி தாமான் கிளை தலைவரும் மற்றும் மலேசிய திராவிடர் கழக சுங்கை சிப்புட் கிளை தலைவருமான மானமிகு ஏலன் கண்ணன் மற்றும் கோலாகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினர் திரு. வேதமாணிக்கம் கண்ணன் ஆகிய இருவரின் வாயிலாக செய்துத் தரப்படுகிறது.
வியாதிகளாலும் நோயினாலும் அவதியுறும் நோயாளிகளை நேரில் சென்று கண்டு அவர்களுக்கு தேவையான உடன் உதவிகள் மற்றும் தொடர் உதவிகளை ஜாலோங் சட்டமனற சேவைமையத்தின் வாயிலாக பெற்றுத் தரபடுகின்றன.
குடும்ப சூழ்நிலையினால் கல்வி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எதிர்நோக்கும் சில கஷ்டங்களுக்கும் சேவை மையத்தின் வாயிலாக உதவிக் கரம் நீட்டப்படுகிறது.
மேலும், ஜாலோங் சட்டமன்றத்திற்குட்பட்ட கொயில்களின் திருவிழாக்களுக்கு மாநியங்களை ஏற்படுத்தி தருவது மட்டுமின்றி அக்கோயில்களின் நில விவகாரங்களை கண்டரிந்து அவற்றை அதிகாரப்பூர்வமாக கோயில்களின் அமைப்புக்களின் பெயர்களில் செயல்படுவதற்கான வழிகளையும் ஏற்படுத்தித்தர முயற்சிக்கப்படுகிறது.
இவ்வாராண உதவிகளை செய்துத்தரும் பொழுதுதான் அரசாங்கத்தால் வழங்கப்படுகினற சேவைகளை நம் இந்தியர்கள் அறிந்திராமால் வைத்திருப்பதும் அதை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்றும் திரு. கோபி கூறினார். ஆதலால், எவ்வாரான உதவியானாலும் அதை சம்பந்தப்பட்டவர்களையே அதற்கான முயற்சிகளை செய்ய வைத்து அதன் பலனை பெற வைப்பதன் மூலம் தானும் பலனடைவதோடு தன்னைப்போல் இருக்கும் பிறருக்கும் அதனை கற்றுத்தந்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

