பிறை சட்டமன்ற தொகுதியில் அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது!

செ.வே. முத்தமிழ் மன்னன்

பிறை மே 14-
அன்னை தனது பிள்ளைகள் மீதும் தனது குடும்பத்தின் மீதும் அள்ளித் தரும் அளவிட முடியாத அன்பை, அவா்களின் ஒப்பற்ற பங்களிப்புகள் மற்றும் அவா்களின் தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதே அன்னையா் தினம் ஆகும்.

அம்மா என்ற சொல்லை உச்சாிக்கும் போது நம் அனைவருடைய உள்ளங்களும் உணா்ச்சி மிகுதியால் தத்தளிக்கின்றன.

அன்னையின் அன்பு தனித்துவமானது. மற்ற எவரோடும் அன்னையின் அன்பை ஒப்பிட முடியாது

அந்த வகையில் அன்னையர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த அன்னையர் தின விழாவில் கலந்து கொண்ட அனைத்து அன்னையர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக பூங்கொத்துகளும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles