பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் கட்டார் வருகையால் RM700 மில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதி திறனை மலேசிய பெற்றுள்ளது!

டோஹா மே 14-
புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மூன்று நாள் வருகை மேற்கொண்டு கட்டார் சென்றுள்ளார்.

கட்டாருக்கான இந்த குறுகிய பயணத்தின் மூலம் சுமார் 700 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதிகளை மலேசிய பெற்றுள்ளது என்று முதலீடு, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஸப்ரூல் தெரிவித்தார்.

முன்னதாக பிரதமருடனான வணிக வட்ட மேசை சந்திப்பின் போது பல்வேறு முக்கிய கட்டார் தொழில் தலைவர்களிடமிருந்து ஏற்றுமதி உறுதிமொழி பெறப்பட்டதாக அவர் சொன்னார்.

நாங்கள் 700 மில்லியன் ரிங்கிட் அளவுக்கு உறுதிப்பாட்டை (ஏற்றுமதி) பெற்றுள்ளோம். இது கட்டார் நிறுவனங்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்றார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles