சுகாதார வசதிகளை மேம்படுத்த 401 திட்டங்களுக்கு ரிம150 மில்லியன் ஒதுக்கீடு

கோத்தா கினபாலு, மே 14 – நாடு முழுவதும் உள்ள கிளினிக்குகளை மேம்படுத்தவும், சுகாதார வசதிகளை வலுப்படுத்தவும் மொத்தம் 401 திட்டங்கள் நடப்பு ஆண்டில் நடைபெற்று வருவதாகவும், இதற்கு ரிம150 மில்லியன் செலவாகும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

சபாவில் மட்டும், RM21.5 மில்லியன் செலவில் 55 திட்டங்கள் நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்றும் அவர் கூறினார்.

“இந்த திட்டங்களை விரைவில் முடிக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்,” என்று அவர் யுஎம்எஸ் பல்கலைக்கழக தேசிய அளவிலான உலக மலேரியா, காசநோய் மற்றும் தொழுநோய் தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
– பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles