
பிரதம மந்திரி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கத்தாருக்கான குறுகிய பயணத்தின் மூலம் சுமார் 700 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி சாத்தியமானது என முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
இன்று முன்னதாக பிரதமருடனான வணிக வட்ட மேசை சந்திப்பின் போது பல்வேறு முக்கிய கத்தார் தொழில் தலைவர்களிடமிருந்து ஏற்றுமதி உறுதிமொழி பெறப்பட்டதாக டெங்கு ஜஃப்ருல் கூறினார்.
“அல்ஹம்துலில்லாஹ், நாங்கள் 700 மில்லியன் ரிங்கிட் அளவுக்கு உறுதிப்பாட்டை (ஏற்றுமதி) பெற்றுள்ளோம். இது எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் கத்தார் நிறுவனங்களின் நம்பிக்கையை காட்டுகிறது.

