கிளைத்தலைவர்களின் ஆதரவோடு தொகுதி தலைவருக்கு சின்னராஜூ போட்டி!!

சுங்கை சிப்புட் மே 15-
நாடு தழுவிய நிலையில் ம இ காவின் தொகுதி நிலையிலான தேர்தல் மிக விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் ம இ கா சுங்கை சிப்புட் தொகுதி தலைவருக்கு சிறந்த சேவையாளராகவும் பண்பாளராகவும் இவ்வட்டாரத்தில் நன்கு அறிமுகமான வீ.சின்னராஜூ போட்டியிட களத்தில் இறங்கியுள்ளார்.

ம இ கா ஸ்ரீ தாமான் கிளையின் தலைவரான சின்னராஜூ சுங்கை சிப்புட் தொகுதி ம இ கா கிளைத் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர்.
சிறந்த சேவையாளர்.

நனிச் சிறந்த தலைமைத்துவத்தையும் கொண்டிருக்கும் சின்னராஜூவால் சுங்கை சிப்புட் தொகுதியின் மாபெரும் உருமாற்றத்தை கொண்டு வரமுடியும் எனவும் கிளைத்தலைவர்கள் பெரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ம இ கா ஸ்ரீ தாமான் கிளையின் தலைவராக பல்வேறு சமுகவியல் நிகழ்ச்சிகளையும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் சின்னராஜூ விளையாட்டுத் துறையிலும் கல்வியிலும் மாணவர்களின் எதிர்காலம் சிறக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டும் வருகிறார்.

அன்னையர்,தந்தையர்,ஆசிரியர் தினம் நாளோடு சேவையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சிகளையும் ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுத்து வரும் இவர் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் வாயிலாகவும் தனித்துவமான சேவையை வழங்கி வருகிறார்.

இவரது சேவையையும் இவரது கிளை,இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளையும் சுங்கை சிப்புட் தொகுதி கிளைத்தலைவர்கள் மட்டுமின்றி மாநில,தேசிய பிரதிநிதிகள் கூட வெகுவாக பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுங்கை சிப்புட் தொகுதி ம இ காவிற்கு புத்துயீர் அளிக்கவும் ம இ கா மீது புதிய நம்பிக்கையை,குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதனை ஊடுருவல் செய்ய சின்னராஜூவின் தலைமைத்துவம் இத்தொகுதிக்கு அவசியம் மட்டுமில்லை அது காலத்தின் கட்டாயம் என தொகுதியின் கிளைத்தலைவர்கள் கருத்துரைக்கிறார்கள்.

இம்முறை தொகுதி தலைவருக்கு சின்னராஜூ இடைக்கால தலைவர் அஜாட் கமாலுடின் அவர்களை எதிர்த்து போட்டியிடும் வேளையில் துணைத்தலைவருக்கு சின்னராஜு அணியில் தொகுதியின் நடப்பு செயலாளர் அஷோக்குமார் களமிறங்கியுள்ளார்.

தொகுதி தலைவருக்கு போட்ட்யிடும் சின்னராஜுவிற்கு தொகுதியின் பெரும்பான்மை கிளைத்தலைவர்களின் ஆதரவு இருப்பதாகவும் அவரது சேவை,பண்பு,கிளைத்தலைவர்களிடம் அவர் கொண்டிருக்கும் மரியாதை,நட்புறவு ஆகியவை இம்முறை அவருக்கு பெரும் வெற்றிகை கொடுக்கும் என சுங்கை சிப்புட் வட்டாரத்தில் ம இ காவினர் மத்தியில் பரப்பரப்பாக பேசப்படுகிறது.

மேலும்,சின்னராஜூ சுங்கை சிப்புட் தொகுதி ம இ காவிற்கு தலைமையேற்றால் புதியதொரு இலக்கை நோக்கி ம இ கா சுங்கை சிப்புட் தொகுதி மிளிரும் எனவும் கிளைத்தலைவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles