லண்டன் மே 15-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை மென்செஸ்டர் சிட்டி வெல்வது உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது.
இன்று அதிகாலை நேரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹாமை அதன் அரங்கிலேயே 2-0 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் சிட்டி வீழ்த்தியது.
இதுவரை 37 ஆட்டங்கள் முடிவில் மென்செஸ்டர் சிட்டி 88 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.அர்செனல் 86 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
வரும் மே 19 ஆம் தேதி நடக்கும் கடைசி ஆட்டத்தில் அர்செனல் தனது அரங்கில் எவர்ட்டனை சந்திக்கிறது.அதேசமயம் மென்செஸ்டர் சிட்டி தனது அரங்கில் வெஸ்ட் ஹெமரை சந்திக்கிறது.
இந்த ஆட்டத்தில் டிரா கண்டால் கூட இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை மென்செஸ்டர் சிட்டி தட்டிச் செல்லும்.
பிபிசி