
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் மே 21-
மலேசிய திருநாட்டில் சிலம்ப கலை வளர்ச்சிக்கு முழு ஆதரவு வழங்குவேன் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரிய உறுப்பினர் எம். ஜெயக்குமார் தெரிவித்தார்.
வரும் ஆகஸ்ட் மாதம் சரவாக்கில் நடைபெறும் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெற்றுள்ளது.
இந்த போட்டியில் அனைத்து மாநில குழுக்களும் கலந்து கொள்கின்றன.
அந்த வகையில் இந்த போட்டியில் தங்கம் வெல்லும் விலாயா மாநில சிலம்ப விளையாட்டாளருக்கு எனது சார்பில் ஆயிரம் வெள்ளி வழங்குவேன் என்றார் அவர்.
அதேசமயம் சிதம்பரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
விலாயா மாநில சிலம்ப கழகத்தின் 43 ஆம் ஆண்டு ஆண்டு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
விலாயா மாநில சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர்டி உதயகுமார் தலைமையில் இந்த ஆண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

