ஃபைசல் அப்துல் ஹலீம் மீது எரி திராவக வீச்சு ! சந்தேக நபரின்முக ஓவியம் வெளியீடு…

கோலாலம்பூர், மே 20: சிலாங்கூர் எஃப்சி கால்பந்து வீரர் முகமட் ஃபைசல் அப்துல் ஹலீம் மீது எரிதிராவக வீச்சு வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் சந்தேக நபரின் முக ஓவியத்தை ராயல் மலேசியன் காவல்துறை வெளியிட்டது.

மே 5 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் 165 சென்டிமீட்டர் உயரம், சுமார் 30 வயது, மற்றும் நடுத்தர உடல் உடையவர் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.

“இந்த முகம் கொண்ட ஒரு நபரை அடையாளம் காணும் அல்லது தகவல் அறிந்தவர்கள், வழக்கின் விசாரணை அதிகாரி இன்.எம். ஜெகச்சந்திரனை 012-684 8166 / 03-2266 6071 அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்க என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

– பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles