

காளிதாஸ் சுப்ரமணியம்
தைப்பிங், மே 20-
தைப்பிங்கில் ஆறுமுக சுவாமி சித்தர் உருவாக்கிய ,பழமை வாய்ந்த ஆலயமான நாலு ரோடு முனீஸ்வரன் என்று அழைக்கப்படும் *அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கும் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நேற்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கலைஞன் கவிமாறன் இந்த ஆலயத்தின் வரலாற்றை கூறும் பக்தி பாடல் ஒன்றை பாடி இன்றைய கும்பாபிஷேகத்தில் வெளியிட்டதோடு வருகை தந்த பக்தர்களுக்கு இடையே சமய சொற்பொழிவாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

