ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபரின் மரணம் பெரும் வேதனையை அளிக்கிறது! பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர் மே 20-
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி பெரும் வேதனையை அளிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவருடன் பயணித்த அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலஸ்தீன மக்களின் உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான போராட்டத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் எளிதாக இருந்தது என்று பிரதமர் வர்ணித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் ரைசியை சந்தித்ததாகவும், இரு நாடுகளுக்கும் நெருக்கமான பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டதாகவும் அவர் சொன்னார். இவரின் மறைவு மிகப்பெரிய பேரிழப்பு என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ரோ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles