
வரும் நவம்பர் 19 ஆம் தேதி கட்டார் நாட்டில் உலகக் கிண்ண கால்பந்து போட்டி அதிகாரப் பூர்வமாக தொடங்குகிறது.
உலகில் புகழ் பெற்ற 32 நாடுகள் இதில் பங்கேற்கும் வேளையில் ஃபீஃபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சங்கத்தின் சார்பில் போட்டியை கண்காணிக்கும் அதிகரிகளாக மலேசியா கால்பந்து சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் மற்றும் மலேசியா முன்னாள் நடுவர் subjhiddin Mohd salleh தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2018 இல் ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஃபீஃபா அதிகாரியாக கிறிஸ்டோபர் பணியாற்றினார்.
மேலும் 2021,2022 ஆசிய மண்டல காட்பந்து போட்டி, 2015 ஐக்கிய அரபு சிற்றரசு ஆசியா கால்பந்து போட்டி மற்றும் 2017 இந்தியாவில் நடைபெற்ற உலக இளையோர் கிண்ண கால்பந்து போட்டியிலும் இவர் அதிகாரியாக பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார்.