
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளருக்கு பி.எஸ்.எம். ஆதரவாளர்கள் வாக்களிப்பார்கள் என்று பிஎஸ்எம் கட்சி தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சுங்கை சிப்புட்டில் நான் போட்டியிட்டால் வாக்குகள் உடையும்.இது தேசிய முன்னணி வெற்றிக்கு சாதகமாக அமையும்.
தொகுதி வழங்கப்படவில்லை என்பதற்காக பக்கத்தான் ஹராப்பானை பழிவாங்க விரும்பவில்லை.
சுங்கை சிப்புட்டில் தேசிய முன்னணி வெற்றி பெற கூடாது என்பதற்காக பிஎஸ்எம் ஆதரவாளர்கள் பக்கத்தானுக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் சொன்னார்.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட எனக்கு 1,505 வாக்குகள் கிடைத்தன. கெஅடிலான் வேட்பாளர் கேவசன் 20,817 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

