
பேராக் மாநிலத்தில் ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் கட்சி சார்பில் வசந்தி போட்டியிடுறார்.
கெஅடிலான் கட்சி மகளிர் அணி உச்சமன்ற உறுப்பினரான இவர் ஊத்தாங் மெலிந்தாங்கில் போட்டியிட கெஅடிலான் கட்சி அனுமதி வழங்கி உள்ளது.
இதனிடையே தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றுள்ள உலு கிந்தா சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் கட்சி சார்பில் அராபாட் மீண்டும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த தேர்தலில் பேராக் மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் மொத்தம் ஐந்து இந்தியர்கள் போட்டியிடுகிறார்கள்.
சுங்கை சட்டமன்றத்தில் வழக்கறிஞர் சிவநேசன், புந்தோங் கில் துள்சி மனோகரன் மற்றும் மாலிம் நாவாரில் பவானி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

