
புத்ராஜெயா:
ரஹ்மா உதவித் தொகை நிதி 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ரஹ்மா அடிப்படை உதவித் தொகை (சாரா), ரஹ்மா உதவித் திட்டம் (எஸ்டிஆர்) ஒதுக்கீடுகள் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் பெறுநர்களின் எண்ணிக்கையுடன் தொடர்ந்து அதிகரிக்க உள்ளது.
நாட்டின் நிதி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தொடர்ந்து மக்களுக்குச் செய்யும் உதவிகளை மேம்படுத்துவதன் மூலம் சேமிப்பில் ஒரு பகுதியைப் பயன்படுத்தப்படுகிறது.
இதில் ரஹ்மா அடிப்படை உதவித் தொகை திட்டத்திற்கு கடந்தாண்டு 130 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.
இது தற்போது 5 மடங்கு உயர்வு கண்டு 700 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக உதவித் தொகை 600 ரிங்கிட்டில் இருந்து 1200 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.
இதன் மூலம் 7 லட்சம் ரிங்கிட் மதிப்பிற்கு மக்கள் பயன் பெறுவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

