
கோலாலம்பூர் மே 22
உலகுக்கு தியானத்தையும், அமைதியையும் போதித்த புத்தர் பிறந்த தினமாகவும், ஞானம் பெற்ற தினமாகவும் இன்று விளங்குகிறது.
இன்று கொண்டாடப்படும் விசாக தினத்தில், அனைத்து புத்த சமயத்தினருக்கும் விசாக தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தமது வாழத்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

