
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர் மே 24-
பத்திரிகை என்பது ஜனநாயகத்தின் குரலாகும்.
இது சக்தி வாய்ந்த ஆயுதம்.
எப்போதும் உண்மைக்கு பக்கம் பலமாக பத்திரிகைகள் விளங்குகிறது.
இருப்பினும், தனிப்பட்ட பழிவாங்கல் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப்படும் போது அதை தடுக்கும் சக்தி பத்திரிகைகளுக்கு உண்டு.
இந்த தருணத்தில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் மீது ஒரு பத்திரிகை இடைவிடாத மற்றும் தேவையற்ற தாக்குதல்களை நடத்துவதை சம்பந்தப்பட்ட தரப்பினர் நிறுத்தி கொள்ள வேண்டும்.
ஒரு மரியாதைக்குரிய பிரமுகராக விளங்கும் டாக்டர் சத்திய பிரகாஷின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த பத்திரிகை முயற்சிக்க கூடாது என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி மூடா கட்சி தலைவர் டாக்டர் சிவபிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தகைய நடத்தைகளா பத்திரிகை அதிகாரத்தை அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்வதாகும்.
இந்த பொறுப்பற்ற அவதூறு பிரச்சாரத்தை சம்பந்தப்பட்ட தரப்பினரும் பத்திரிகையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
தனிப்பட்ட பகைமைக்காக சேற்றில் இறக்காமல் பத்திரிகையின் நேர்மை நிலைநாட்டப்பட வேண்டும்.
பொய்களைப் பரப்புவதற்கும் முரண்பாட்டை விதைப்பதற்கும் ஒரு செய்தித்தாளை குறிப்பிட்ட தரப்பினர் தவறாகப் பயன்படுத்த கூடாது.
இந்த முறைகேடான செயல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உண்மை மற்றும் நியாயத்தைப் பின்தொடர்வது ஒவ்வொரு ஊடகவியலாளருக்கும் வழிகாட்ட வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

