
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் மே- 24
80-களில் ம.இ.காவின் தலைமையை எடுத்த பிறகு , கல்வி மூலமாக தலைமுறையை விதைப்போம் என்ற மாபெரும் கனவை விதைத்தவர் துன் சாமிவேலு. ஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரி என்ற புரட்சியை கொடுத்தவர் அவர். அன்று எஸ்.ஆர்.பி- க்கு பின் கல்வி வாய்ப்பு கிடைக்காத அந்த இளைஞர்களின் பிள்ளைகளை பட்டதாரிகளாக உருவாக்கும் மாபெரும் முயற்சியில் அவர் உருவாக்கிய விதை தான் TAFE கல்லூரி, மற்றும் ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகம். இன்று பல பட்டதாரிகள் உருவாக்கப்பட்டனர் .
70- 80 ஆண்டுகளில் இந்திய சமுதாயம் கல்வியில் பின் தங்கியதிற்கு காரணம் இந்த நாட்டின் கல்வி முறையாகும். தோட்ட தமிழ்ப்பள்ளிகளில் படித்து வந்த மாணவர்கள் எஸ்.ஆர்.பி தேர்வு என்ற கல்வி முறையால் அடுத்த கட்ட கல்விக்கு செல்ல முடியாமல் போன காலம் இருந்தது.
கல்வியில் பின் தங்கிய அந்த மாணவர்கள் வேலைக்குச் சென்றார்கள். அதற்கு காரணம் தோட்ட சூழலான வாழ்க்கை என ம.இ.காவின் தேசியத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
தலைமுறை புரட்சியை செய்தது ம.இ.கா. இந்த ம.இ.காவிற்கு நிகர் ம.இ.காதான். இன்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் எம்.ஐ.இ.டி வாயிலாக பல மாணவர்களுக்கு கடன் உதவி, மற்றும் கல்வி உபகார நிதி அதிமாக வழங்கப்படுகிறது. மேலும் அவர் தலைமையில் ஏய்ம்ஸ்ட் பல்கலைகழக கடன் கட்டி முடிக்கப்பட்டது என டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
ஆகையால் இன்று துன் சாமிவேலு-வின் சிலை இங்கு வைக்கப்பட்டதற்கு காரணம் அவர் இந்த ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகத்தை கட்டியதற்காக அல்ல தலைமுறையின் கல்வி புரட்சிக்கு அவர் விதைத்த விதையே காரணம் என டத்தோ ஸ்ரீ சரவணன் துன் சாமிவேலு அவர்களின் சிலை திறப்பு விழாவில் இவ்வாறு தெரிவித்தார்.

