
காளிதாஸ் சுப்ரமணியம்
சுங்கை பட்டாணி, மே 25-
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக ம.இ.காவின் தேசியத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இன்று நியமிக்கப்பட்டார்.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா இன்று சுங்கைபட்டானி ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் கிரேட் ஹால் மண்டபத்தில் நடைபெற்றது.
நேற்று துன் ச.சாமிவேலுவின் உருவச்சிலை ஏய்ம்ஸ்ட் பல்கலைகழக முன் வளாகத்தில் வைக்கப்பட்டு நடத்தப்படும் முதல் பட்டமளிப்பு விழாவாக இந்த 2024ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், இதே ஆண்டில் ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகத்தின் இணை வேந்தராக டத்தோ ஸ்ரீ எம். சரவணன் பொறுப்பேற்பது கூடுதல் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

