தரமான கல்வியை இனபாகுபாடின்றி ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் வழன்குகிறது!- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

காளிதாஸ் சுப்ரமணியம்

சுங்கை பட்டானி, மே 25

இன பாகுபாடின்றி தகுதியுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது என்று பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறினார்.

மக்கள் தலைவர் துன் சாமிவேலுவின் உன்னத நோக்கத்தால் தொடங்கப்பட்ட இந்த ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் இந்திய சமுதாயத்தின் மிகப் பெரிய சொத்தாக விழங்குகிறது

நமது மாணவர்கள் தலைசிறந்த கல்விமான்களாக உருவாக வேண்டும் என்பதே துன் சாமிவேலுவின் உயரிய கனவாக இருந்தது.

அதன் அடிப்படையில் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று பட்டம் பெற்றுள்ளனர்.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 15ஆவது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழகத்தின் கிரேட் ஹால் மண்டபத்தில் நடைபெறுகிறது.

மருத்துவம், பல்மருத்துவம், மருந்தகம், இஞ்சிநியரிங், வர்த்தகம் ஆகிய உள்ளிட்ட துறைகளில் கல்வி முடித்த 642 மாணவர்களுக்கு இன்று பட்டங்கள் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மாணவர்களின் உயர்க் கல்வி கனவை ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் இன்று நிறைவேற்றி வருகிறது. ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் இந்த கல்வி சேவை தொடர்கிறது.

இன பாகுபாடின்றி தகுதியுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் வழங்குவதே எங்களின் முதன்மை இலக்காக இருக்கிறது என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

கடந்த காலங்களில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் பல மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளத்தை வழங்கியிருக்கிறது.
தற்போது அரசாங்கம் வழங்கும் நிதியின் வாயிலாக இந்த கல்வி உபகாரச் சம்பளத்தை அதிகமான மாணவர்களுக்கு வழங்க முடிகிறது.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பராமரிப்பு, மேம்பாட்டு பணிகளுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்ட்டார்.

மாணவர்களுக்காக தரமான கல்வியினை வழங்கும் பல்கலைக்கழகமாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழம் விளங்குகிறது.

ஆகவே இந்தியர்களை தவிர்த்து மற்ற இன மக்களும் தங்களின் பிள்ளைகளுக்கான முதன்மை பல்கலைக்கழகமாக ஏய்ம்ஸ்ட்டை தேர்வு செய்ய வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles