



ஈப்போ, மே. 25: இந்நாட்டு இந்தியர்கள் தங்களின் கலை கலாச்சாரத்தை பேணி காப்பதில் என்றென்றும் முற்பட வேண்டும். ஓர் இனத்தின் அடையாளம் அவர்களின் மொழி மற்றும் கலை கலச்சாரம் என்பதனை உணர்ந்து செயல்படுவது அவசியமாகும்.
அந்த வகையில் நிர்த்திய ஜோதி நடனப்பள்ளி மாணவிகள் இரண்டரை மணி நேரம் இடைவிடாது சாதனை படைத்துள்ளனர் என்று மகப்பேறு நிபுணத்துவ மருத்துவர் வ. ஜெயபாலன் கூறினார்.
பேரா மாநிலத்தில் கடந்த 36 ஆண்டுகள் செயல்பட்டு வரும் நிர்த்திய ஜோதி நடனப் பள்ளி அதன் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 53 மாணவிகள் இரண்டரை மணி் நேரம் இடை விடாது நடனம் ஆடினர்.
இவர்களை பார்ப்தற்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று அவர் பாராட்டினார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இதுபோன்ற நடனப்பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
கடந்த 36 ஆண்டுகாலமாக இந்த நடனப் பள்ளியை வழி் நடத்தி வரும் அதன் ஆசிரியை ரத்னா உமா மனோகரன் தலைமையில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.இந்த நடனப் பள்ளியில் பரதம் பயின்ற மாணவிகள் பலர் அரங்கேற்றம் கண்டுவிட்டனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பேரா மாநிலத்தில் பல பகுதிகளில வகுப்புகளை நடத்தி வரும் ரத்ன உமா மனோகரன், நாட்டியத் துறையில் சிறந்து விளங்கி வரும் இவர் ‘மலேசிய் சுவர்முகி ‘ என்ற பட்டம் பெற்றவர்.
நாட்டியப் பள்ளியின் 36 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நடைப்பெற்ற நாட்டிய நிகழ்வில் சிவ லீலா விஷ்னு கதை அம்சம் கொண்ட நாட்டிய படைப்பு இரண்டரை மணி நேர இடை விடாது நடனமணிகள் நடனமாடி சாதனை படைத்துள்ளனர் என்பது பாராட்டபட வேண்டிய விசயமாகும் என்று அவர் கருத்துரைத்தார்.
பரத நாட்டிய தெய்வம்சம் கொண்ட கலையாகும் இந்த கலையை கற்பதின் வழி மாணவர்களுக்கு நற்சிந்தனை, ஆற்றல் , தெய்வ சிந்தனைகள் வளரும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வி்ன் நிறைவுவிழாவில், நாட்டிய சக்ரவர்த்தி குமுதினி சிவநாதன் நிகழ்வில் நடனம் ஆடிய மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

