பெருவாஸ் தொகுதியில் ஐ பி எப் கட்சியின் அன்னையர் தின கொண்டாட்டம்!

பெருவாஸ், மே.25: நாம் தேடிக்கொண்டிருக்கும் சொர்க்கம் தாயின் காலடியில் உள்ளது. தாயை சிறந்த கோவிலும் இல்லை என்று அன்னையர் தின வாழ்த்தினை வருகையளித்த அனைத்து அன்னையரையும் மெய்சிலிர்க்க கூறி மகிழ்ந்தார் பெருவாஸ் அம்னோ தொகுதியின் உதவித்தலைவர் பஹாமி அஸ்மாவி.

பெருவாஸ் தொகுதியின் அம்னோ தலைவர் டத்தோ டாக்டர் ஹஜி அஸ்காரை பிரதிநிதித்த இவர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த பெருவாஸ் ஐ பி எப் தொகுதி தலைவர் வி.பெரியசாமி மற்றும் பேராக் மாநில இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பு ( காப்பின்) அமைப்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தம் பிள்ளைகளை நல்லவர்களாக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து தாயாரும் செயல்படுகின்றனர். இருப்பினும், ஒரு சில பிள்ளைகள் தாயின் பேச்சை கேட்காமல் புறக்கணிப்பு செய்வதால் தீமையை எதிர்நோக்குகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விசயம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பிள்ளையும் தம் அன்னையிடம் அன்பாகவும், பாசமாகவும் அதோடு அக்கறையுடன் அவரை பேணி காக்க முற்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் செய்து தர வேண்டும். ஓர் அன்னையின் அர்பணிப்பை என்றென்றும் மதிப்பளித்து அவருக்கு நன்றி கூறும் பண்பினை பிள்ளைகள் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இத்தொகுதியில் ஐபிஎப் தொண்டர்கள் பரிசான் நேசனல் வெற்றிக்கு என்றென்றும் ஆதரவாக உள்ளனர். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் சேவை மென்மேலும் தொடர மானியங்கள் வழங்கி உதவிட பரிசான் நேசனல் முற்பட வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்தார்.

இந்த பெருவாஸ் தொகுதியில் சுமார் 70 அன்னையர்களை அடையாளம் கண்டு சிறப்பிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு வீட்டில் சமைக்கும் பொருட்டு உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. அத்துடன், விருந்து உபசரிப்பும் வழங்கப்பட்டதாக ஏற்பாட்டுக்குழு தலைவருமான பெரியசாமி வடிவேலு தெரிவித்தார்.

இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் ஐ பி எப் தேசிய மகளிர் தலைவி சரஸ்வதி மற்றும் பேராக் மாநில ஐ பி எப் மகளிர் தலைவி பிரேமாமேரி தலைமையில் அன்னையர்களுடன் இணைந்து அனிசல் வெட்டி உண்டு மகிழ்ந்தனர். அதோடு, இவ்வட்டாரத்தில் நன்கு அறிமுகமான சமூக சேவையாளர் சண்முகத்தை பெருவாஸ் ஐ பி எப் தொகுதியினர் கெளரவித்து மகிழ்ந்தனர். அவரின் சேவை மேலும் தொடரும்படி கேட்டுக்கொண்டனர்.

இந்நிகழ்வில், சிறப்பு பிரமுகர்களாக ஐ பி எப் கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோ கே. வேலாயுதம், பேராக் மாநில ஐ பிஎப் தலைவர் வி.மாணிக்கம், காப்பின் ஒருங்கிணைப்பு தலைவர் லெப்டனன் டாக்டர் சுந்தர்ராஜன், காப்பின் மகளிர் தலைவி சக்கிலா நாயர்,ஐ பிஎப் மகளிர் தலைவி சரஸ்வதி, பிரேமாமேரி மற்றும் ஐ பி ஐப் தொண்டர்கள் ,பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles