
பினாங்கு மே 25-
சுங்கை பாக்கப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், PH தலைமையிலான கூட்டணியை நிராகரிக்குமாறு இந்திய வாக்காளர்களை உரிமை கட்சி கேட்டுக் கொள்ளும் என்று அதன் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
நேற்று சுங்கை பக்காப் சட்டமன்ற உறுப்பினர் நோர் ஜம்ரி லத்தீஃப் காலமானதை தொடர்ந்து விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
மரணம் அடைந்த ஜம்ரி நிபோங் திபாலின் பாஸ் தலைவராகவும் இருந்தார். கடந்த 2023 மாநிலத் தேர்தலில் பக்கத்தான் வேட்பாளர் நூர் ஹிடாயா சே ரோஸுக்கு எதிராக 1,563 வாக்குகள் பெரும்பான்மையில் இவர் வெற்றி பெற்றார்.
சுங்கை பாக்காப் தொகுதியில் மலாய்க்காரர்கள் 61 சதவீதமும், சீனர்கள் 22 சதவீதமும், இந்தியர்கள் 17 சதவீதமும் உள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற கோலகுபு பாரு இடைத்தேர்தலைப் போலவே, இந்த சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் வெற்றியாளரைத் தீர்மானிப்பதில் இந்தியர்களுக்கு முக்கிய பங்கு இருக்கும்.
மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் பெரிக்கத்தான் நேஷனல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன
இருப்பினும் கோலகுபு பாரு தேர்தலைப் போலவே, இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அரசு பொது நிதியையும், அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தி அலையை தனக்கு சாதகமாக மாற்றும் வாய்ப்பு பக்கத்தானுக்கு உள்ளது.
ஆகஸ்ட் 2023 இல் நடந்த மாநிலத் தேர்தலில், PN வேட்பாளர் ஜாம்ரியின் பெரும்பான்மை பெரியதாக இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..
மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், அந்த இடம் பெரிக்கத்தானுக்கு செல்லும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இருப்பினும், இந்தத் தொகுதியில் இந்திய வாக்காளர்களின் அதிருப்தியின் காரணமாக செரிக்கத்தான் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியும் என்று அவர் சொன்னார்.

