

காளிதாஸ் சுப்ரமணியம்
பாடோங் (கெடா) மே 25-
இன பாகுபாடின்றி தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் கண்டிப்பாக வழங்கும் என்று அப்பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சாதனைத் தலைவர் துன் சாமிவேலு சிந்தனையில் உருவான ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் தற்போது இந்திய சமுதாயத்தின் மிகப் பெரிய சொத்தாக விளங்குகிறது.
நமது மாணவர்கள் உயர் கல்வி வாய்ப்பு கிடைக்காமல் தத்தளிக்கக் கூடாது என்பதுதான் துன் சாமிவேலுவின்
கனவாக இருந்தது.
இதன் அடிப்படையில் தற்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றுள்ளனர் என்று அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
இன்று ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 15ஆவது பட்டமளிப்பு விழா விமரிசையாக நடைபெறுகிறது.
மருத்துவம் உட்பட பல துறைகளில் கல்வி முடித்த 642 மாணவர்களுக்கு இன்று பட்டம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இதனிடையே நேற்றிரவு ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் துன் டாக்டர் சாமிவேலுவின் உருவச் சிலை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
ஏழை இந்திய சமுதாய மாணவர்களின் கல்விக்காக நிறுவப்பட்ட ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம் இன்று உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகமாக விளங்குகிறது.

