
மலாக்கா, மே 26- ‘கிக்‘ ஆணையம் அமைப்பது மீதான சட்ட மசோதாவை அரசாங்கம் வரும் ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இளைஞர்கள் மத்தியில் இதற்கு முன்னர் எழுந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதாக அவர் சொன்னார்.
அண்மையில் இளைஞர்களிடமிருந்து ஒரு கோரிக்கை கிடைத்தது. தற்காலிக அடிப்படையில் வருமானம் ஈட்ட உதவும் கிக் பொருளாதாரத் துறையில் சுமார் ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்பட்டது.
அரசாங்கம் உடனடியாக செயல் திட்டத்தை வரைந்ததோடு இதன் தொடர்பில் (கிக் ஆணையம்) சட்டத்தையும் தயார் செய்துள்ளது. வரும் ஜூலை மாதம் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வோம். இளைஞர்களின் குரல் கேட்கும் பட்சத்தில் அதனைக் கேட்பதோடு மட்டுமல்லாமல் நிறைவேற்றவும் செய்கிறோம் என்றார் அவர்.
bernama