சுங்கை சிப்புட் மைதடிஸ்ட் பள்ளி மாணவர்கள் மேலும் பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

சுங்கை சிப்புட், மே.28: சுங்கை சிப்புட் மெதடிஸ்ட் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் மீண்டும் சாதனை படைத்தனர்.2023 ம் ஆண்டு வெளியான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளில் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த தேர்ச்சியினைப் பெற்றனர். எல்லாப் படங்களிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதாக பள்ளியின் முதல்வர் திரு.கருணாகரன் பெருமையுடன் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு 7 மாணவர்கள் அனைத்துப் படங்களிலும் ஏ பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.தாங்கள் எழுதிய அனைத்துப் படங்களிலும் ஏ பெற்றவர்கள்,சியா பெங் சாய்,நிவேகன் நாயுடு த/பெ பாலகிருஸ்ணன்,சதேஸ் த/பெ ரமேஸ்,நோர் சமிரா,நாகேஸ்வரி த/பெ தயாளன்,நோர் சாயிரா,சக்திவேல் த/பெ ராதாகிருஷ்ணன் ஆகியோராவர்.

சிறப்பு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பள்ளி முதல்வர் கருணாகரன் ,சான்றிதலையும்,பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.மேலும் இவ்வெற்றிக்கு அயராது பாடுபட்ட பள்ளி ஆசிரியர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

இது தவிர்த்து எல்லா முயற்சிக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் பள்ளியின் மேலாளர் வாரியத்திற்கும் தனது ம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.அடுத்தாண்டு இதைவிட சிறந்த மதிப்பெண்கள் பெற பாடுபடப் போவதாகக் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles