
டெல்லி: மோடி கடவுளின் அவதாரம் என்பதை ஆர்.எஸ்.எஸ். நம்புகிறதா என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி அண்மையில் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,’என் தாயின் மரணத்துக்குப் பின்னர் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். நான் மனிதப்பிறவியே இல்லை என்பதை இப்போது உணர்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன்.
மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன். என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த கடவுள்தான்.
2014-ல், தான் இந்த நாட்டின் பிரதான சேவகன் என்று மோடி கூறினார். 2019-ல், தான் ஒரு பாதுகாவலன் என்று கூறினார். 2024-ல், தனது தாயின் வயிற்றில் இருந்து பிறக்கவில்லை, தான் கடவுளின் அவதாரம் என்று பிரதமர் மோடி கூறுகிறார் மோடி கடவுளின் அவதாரம் என்பதை ஆர்.எஸ்.எஸ். நம்புகிறதா கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
Dinakaran

