இளம் சட்டமன்ற உறுப்பினர் நிகழ்வு அடுத்தாண்டும் நடத்தப்படும்!

ஷா ஆலம், மே 30- இங்கு நடைபெற்ற 2024 சிலாங்கூர் இளம் சட்டமன்ற உறுப்பினர் (ஏடிஎன்) நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் வெளிப்படுத்திய திறனை மாநில சட்டமன்ற சபாநாயகர் பெரிதும் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் வாதங்களை தரமான முறையில் முன்வைத்ததுடன் நடப்பு நிலவரங்கள் மற்றும் மாநில அரசின் கொள்கைகைள் குறித்து பரந்த அறிவாற்றலையும் கொண்டுள்ளனர் என்று லாவ் வேங் சான் கூறினார்.

அடுத்த தலைமுறைத் தலைவர்களின் ஆற்றலை வெளிக்கொணர்வதற்கு ஏதுவாக இந்த திட்டத்தை அடுத்தாண்டும் தொடர்ந்து நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று இங்குள் விஸ்மா டி.என்.எஸ்.சில் நடைபெற்ற இளம் சட்டமன்ற உறுப்பினர் தொர்பான செய்தியாளர் கூட்டத்தின் போது அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles