உலகில் டிங்கி சம்பவங்கள் அதிகரிப்பு- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா, மே 31 – கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகளவில் டிங்கி சம்பவங்களின் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக அமெரிக்காவில் இந்த நோய்த் தாக்கம் இவ்வாண்டு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம்
வெளியிட்ட புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு ஏப்ரல் வரை அமெரிக்காவில் எழுபது லட்சத்திற்கும் அதிகமான டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மொத்தமாக பதிவான 45 லட்சம் டிங்கி சம்பவங்களை விட இது அதிகமாகும் என ஜெர்மன் செய்தி நிறுவனம் கூறியது.

உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி 16,000 க்கும் மேற்பட்டோர் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். மேலும் 3,000 பேர் இந்நோயினால் இறந்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles