
ஷாஆலம்: மே 31-
சொக்சோ எனப்படும் சமூகநல பாதுகாப்பு திட்டத்தில் தொழிலாளர்களை பதிவு செய்யும் முதலாளிகளுக்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று தெரிவித்தார்.
அனைத்து தொழிலாளர்களையும் சொக்சோவில் பதிவு செய்வதற்கு முதலாளிகளுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது.இதனால் சொக்சோவில் பதியும் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதன் அடிப்படையில் இந்த கால அவகாசம் தொடர்ந்து 30 நாள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆகவே வரும் ஜூன் 30ஆம் தேதி வரை முதலாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பெர்னாமா

