
எதிர்வரும் 15 ஆவது பொதுத் தேர்தலில் கூடுதலாக 14 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அம்மாநில பி.கே.ஆர் திட்டமிட்டுள்ளது. இந்த தொகுதிகளில் குறைந்தது 10 தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்றும் இதன்வழி பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசாங்கத்தை அமைப்பதில் பி.கே.ஆர் உதவ முடியும் என்று பேரா மாநில பி.கே.ஆர் தலைவர் Chang Lih Kang தெரிவித்தார்.
எனினும் இந்த வியாழக்கிழமை நடைபெறும் கட்சியின் தலைமைத்துவ கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என அவர் கூறினார். பேராவில் மொத்தம் 59 சட்டமன்ற தொகுதிகளும் 24 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் பேரா பி.கே.ஆர் 15 தொகுதிகளில் போட்டியிட்டு Kuala Kurau, Teja, Simpang Pulai மற்றும் Ulu kinta ஆகிய நான்கு தொகுதிகளை வென்றது.