
23வது COSH எனும் தொழிலியல் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் பற்றிய கண்காட்சி ,கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் மற்றும் NIOSH எனப்படும் தேசிய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கழகத்தின் தலைவர் Datuk வில்சன் யுகாக் கும்போங் (Wilson Ugak Kumbong) ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
NIOSH ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் தொழிலியல் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான அண்மைய தகவல்களையும் அதன் மேம்பாடு மற்றும் முன்னேற்றங்களை அறிந்துக் கொள்வதற்கான சிறந்த தளமாகவும் இது அமைந்தது.
COSH -யின் மூலம் பணியாளர்கள் தனது பணியிடத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பல ஆலோசனைகள் மற்றும் அணுகுமுறைகள் பற்றிய விரிவான விவாதத்தில் ஈடுபட ஒரு நல்ல வாய்ப்பும் கிட்டியது.
பல நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளிகள், ஆராய்ச்சியாளர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் ஊக்குவிப்பு அதிகாரிகள் இந்த COSH திறப்பு விழாவிற்கு வருகை புரிந்தனர்.
இதனிடையே, 23 வது COSH திறப்பு விழாவை மனித வள அமைச்சர் எம். சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். 2021- 2025 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு மற்றும் வேலை ஆரோக்கியம் தொடர்பான முதன்மை திட்டத்தையும் அவர் அறிமுகம் செய்தார்.
அதோடு அங்கு அமைக்கப்பட்டிருந்த COSH தொடர்புடைய முகப்பிடங்களையும் சரவணன் பார்வையிட்டார். மேலும் வேலையிட பாதுகாப்புக்கான கருவிகளையும் அவர் பரிசோதித்துப் பார்த்தார்.