நாடும் மக்களும் சுபிட்சமாக இருக்க பாடுபடுவோம்! மக்கள் கெமுனிகேஷன் தலைவர் முத்து வேண்டுகோள்

கோலாலம்பூர் ஜூன் 3-
பல்லின மக்கள் வாழும் மலேசிய திருநாட்டில் அமைதியும் சுபிட்சமும் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்று மலேசிய மக்கள் கொமுனிகேஷன் தலைவர் முத்து (கேபின்) கேட்டுக் கொண்டுள்ளார்.

நாம் ஒருவருக்கொருவர் நன்பை பாராட்ட வேண்டும். அமைதியை பேன வேண்டும். அந்த வகையில் மலேசியர்கள் மத்தியில் தொடர்ந்து சகோதரத்துவம் மலர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பொதுநல வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றி வரும் முத்து அவர்கள் கடந்த காலங்களில் இந்திய டாக்சி ஓட்டுநர்களுக்கு பெரும் அளவில் உதவிகளை வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மலேசிய மக்கள் கொமுனிகேஷன் சங்கத்தின் செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் சிவா மற்றும் ராஜா இராமையா ஆகியோரும் தங்களது செய்தியில் மலேசியர்கள் மத்தியில் ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

உலக அரங்கில் அனைத்து இனங்களும் ஒற்றுமையுடன் வாழும் ஒரு நாடாக மலேசிய விளங்குகிறது. இந்த பெருமை தொடர்ந்து கட்டிக் காக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles