பண்டான் நாடாளுமன்ற தொகுதியில் கெஅடிலான் கட்சி தேசிய துணை தலைவர் ரபிஸி ரம்லி போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து தேசிய முன்னணி, பெரிக்கத்தான் நேஷனல், வாரிசான் கட்சிகள் உட்பட 5 பேர் போட்டியிடுகின்றனர்.
பண்டான் நாடாளுமன்ற தொகுதியில் 1 லட்சத்து 48,361 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் இந்தியர்கள் 11,757 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பண்டான் நாடாளுமன்ற தொகுதியில் ரபிஸி ரம்லி அமோக வெற்றி பெற்றார்.
இம்முறையும் ரபிஸி ரம்லி வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது.