உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் இன்று காலையில் பெற்றோர் நடராஜன் – வம்சளாதேவி ஆகியோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் புடைசூழ வேட்பு மனுவை மனுவை தாக்கல் செய்தார். உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி பக்கத்தான் ஹரப்பான் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவரை வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் இவரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று வர்ணிக்கப்படுகிறது.