க்கத்தான் ஹரப்பான் கோட்டை என்று வர்ணிக்கப்படும் பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் ஜசெக வேட்பாளர் ராயரை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் ஐபிஎப் கட்சி தலைவர் டத்தோ லோகநாதன் இன்று மிகப் பெரிய ஆதரவாளர்களுடன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
32 ஆண்டுகளுக்கு பின்னர் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிலாங்கூர் கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் அமானா கட்சி தேசிய தலைவர் மாட் சபுவை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் கஜேந்திரன் போட்டியிடுகிறார்.
முகமட் சாபு பலம் வாய்ந்த வேட்பாளர் என்றாலும் அவருக்கு கடுமையான போட்டியை கொடுப்பேன் என்று கஜேந்திரன் கூறுகிறார்.