நாடே எதிர்பார்க்கும் ஒரு தேர்தல் களமாக உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பக்கத்தான் ஹரப்பான் சார்பில் மண்ணின் மைந்தர் மற்றும் உலு சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் டத்தோ மோகன் போட்டியிடுகிறார்.
ஐந்து முனை போட்டி ஏற்பட்டாலும் இங்கு டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் மற்றும் டத்தோ மோகன் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.