இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்திற்காகபேங்க் ரக்யாத் 5 கோடி வெள்ளி ஒதுக்கீடு! துணை அமைச்சர் டத்தோ இரமணன் அறிவிப்பு

கோலாலம்பூர் ஜூன 5-
இந்நாட்டில் உள்ள இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்திற்காக (BRIEF-i) பேங்க ரக்யாட் 5 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ ஆர் இரமணன் இன்று அறிவித்தார்.

இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவர்களின் வர்த்தக விரிவாக்கம், மூலத்தன செலவுகளுக்கு உதவும் நோக்கில் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில் முனைவர்கள் பயன்பெறும் வகையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் கீழ் மற்றொரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்த முழு ஆதரவு வழங்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

உண்மையில், வணிகத்தை மேம்படுத்துவதற்கும் முன்னேற்றுவதற்கும் தொழில் முனைவோரின் அர்ப்பணிப்பு எனக்கு எப்போதும் ஊக்கமளிக்கிறது.

அதனால் தான் இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறேன்.

பொருளாதார பலம் மட்டுமே இந்த நாட்டில் இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்.

இதுவே எனது நம்பிக்கையும் கொள்கையும் என்று அவர் சொன்னார்.

70 ஆண்டுகளை செயல்பட்டு வரும் பேங்க் ரக்யாட்டின் இந்த BRIEF-I திட்டம் மலேசிய சமூகம் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதர்கான அர்ப்பணிப்பு இங்கு வெளிப்பட்டுள்ளது.

அதே வேளையில் தீவிர வறுமையை ஒழிப்பதிலும் மலேசியாவின் பொருளாதாரத்தில் உள்ள இடைவெளியை குறைப்பதற்கும் இது வழிவகுக்கிறது.

பேங்க் ரக்யாட் BRIEF-i திட்டம் இந்திய சமூகத்தின் தொழில் முனைவோருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய மற்றொரு முயற்சியாகும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்திய சமூக தொழில் முனைவோரை ஆதரிப்பதன் மூலம், அனைவருக்கும் வளமான பொருளாதாரத்தை வளர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

பேங்க் ராக்யாட் இரட்டை கோபுரத்தில் நடைபெற்ற BRIEF-I இன்று அறிமுக விழாவில் உரையாற்றியபோது டத்தோ இரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தையில் உள்ள மற்ற நிதி திட்டங்களுடன் ஒப்பிடுகையில் BRIEF-i பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

குறு வனிகர்களுக்கு 1, 000 முதல் 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கான கடனுடவிக்கு ஆண்டுக்கு 6.50% வீதத்தை வழங்குகிறது.

சிறு, நடுத்தர வணிகர்களுக்கு 50,001 ரிங்கிட் முதல் பத்து லட்சம் வெள்ளி வரையிலான கடனுடவிக்கு ஆண்டுக்கு அடிப்படை நிதி விகிதம் 7.5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles