குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக!

புதுடில்லி ஜூன் 5-
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளில் எந்தக் கட்சியும் வெற்றி பெறாததால் கூட்டணி ஆட்சி அமைகிறது.

பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது.

அதேசமயம் இன்று மாலையில் நடக்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற பாஜக திட்டமிட்டுள்ளது.

குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles