மைபெமிலி நட்பு புலன குழுமத்தின் குடும்ப தின விழா விமர்சையாக நடைபெற்றது!

கோலாலம்பூர், ஜூன் 10-
கோலாலம்பூர் வெற்றி சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். பிள்ளை அவர்களை ஆலோசகராவும் விலாயா மாநில சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.டி.உதயகுமாரை தலைவராகவும் கொண்டிருக்கும் மை ஃபேமிலி நட்பு புலன குழுமத்தின் குடும்ப தின விழா நேற்று முன்தினம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

தலைநகரில் உள்ள உணவகம் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரிய உறுப்பினர் எம் ஜெயகுமார், சிலாங்கூர் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் பிரபாகரன், துணை அமைச்சர் சின் தோங்கின் சிறப்பு அதிகாரி எம் கண்ணன், அனைதுதுலக பேட்மிண்டன் சங்கத்தின் போட்டி ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் மற்றும் அன்பழகன் ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.

புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் ஓய்பி டாக்டர் மனோ பரமசிவம், டத்தோ டாக்டர் ஜெகா, அம்பாங்கைச் சேர்ந்த டாக்டர் நாகராஜ், செலாயாங் பசார் பூரோங் இந்திய காய்கறிகள் வியாபார சங்கத்தின் தலைவர் டாக்டர் மணிச்செல்வன், பங்சார் தமிழ்ப் பள்ளி வாரியத் தலைவர் டத்தோ சங்கர், தொழில் முனைவர் சுப்ரமணியம், கம்போங் பண்டான் அரசியல் பிரமுகர் ராஜா காளிமுத்து, மூத்த அரசியல்வாதி பார்லிமெண்ட்
செல்வா, டாக்டர் மகேந்திரன், டிஎன்பி சந்திரசேகரன், மூத்த அரசியல்வாதி தோகையடி சண்முகம், காஜாங் பிரமுகர் டாக்டர் செல்வராஜா, லெம்பா பந்தாய் கெஅடிலான் உதவி தலைவர் பக்தவச்சலம், பிகேஆர் ரேமன், பிகேஆர் ஷினா, சிலாங்கூர் – விலாயா மாநில காது கேளாதோர் சங்கத்தின் தலைவர் சண்முகம், பிரிக்பீல்ட்ஸ் பிரிண்டர் ராமா, கோயில் சந்திரன் ஆகியோருக்கு இந்த விழாவில் சிறப்பு செய்யப்பட்டது.

சைட் புத்ரா ஜாலான் ரோப்சனில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை 50 லட்சம் வெள்ளியில் கட்டும் பணியை மேற்கொண்டிருக்கும் அதன் தலைவர் ராஜா புலேந்திரன் துணை தலைவர் மூர்த்தி ஆகியோரின் சேவையை பாராட்டும் வகையில் அவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல், விளையாட்டு மற்றும் பொது சேவையில் பணியாற்றி இருக்கும் டாக்டர் பி.எஸ். பிள்ளையும் இந்த விழாவில் சிறப்பிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக சேவகி டாக்டர் தமிழ்செல்வி மற்றும் பத்திரிகையாளர் செ.வே.முத்தமிழ்மன்னன் இந்த விருந்து நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles