3ஆவது முறையாக பிரதமராக பதவி ஏற்றமோடிக்கு மலேசிய தமிழர்கள் வாழ்த்து!

கோலாலம்பூர் ஜூன் 10
தொடர்ந்து 3ஆவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்று கொண்ட மோடிக்கு மலேசிய தமிழர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

மலேசிய மக்கள் கொமுனிகேஷன் சங்கத்தின் தலைவர் முத்து தலைமையிலான பொறுப்பாளர்கள் இந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா-இந்தியா இடையிலான தொப்புள் கொடி உறவை வலுப்படுத்துவோம் இந்தியப் பிரதமராக மீண்டும் பதவி ஏற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் நரேந்திர மோடி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு சிறந்த ஆட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மலேசியா-இந்தியா இடையிலான இருவழி மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் இந்திய மென்மேலும் முன்னேறி வருகிறது.

உலக அரங்கில் போற்றப்படும் தலைவராக மோடி தொடர்ந்து பீடுநடைப் போடுவார் என்ற நம்பிக்கை மேலோங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles