
மின்னல் பண்பலை தமிழ்ப்பள்ளிகளுக்கு புத்தகம் திரட்டும் வகையில் ‘Jom Santhippom” நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
மாணவர்களிடையே, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் , பள்ளிகளில் போதுமான வாசிப்பு புத்தக கையிருப்பு இருப்பதை உறுதி செய்யவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுக்குமாறு, கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தமிழ், மலாய், ஆங்கில மொழிகளில் உள்ள வாசிப்பு புத்தகங்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றன.
புதிய புத்தகங்களையும் நல்ல நிலையில் உள்ள பயன்படுத்தப்பட்ட புத்தகங்களையும் பள்ளிகளுக்கு வழங்கலாம்.
ஜூன் 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை மணி 8 முதல் நண்பகல் மணி 1 வரை, ஆர்.டி.எம் நுழைவாயிலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில், பொது மக்கள் நேரடியாக வந்து புத்தகங்களை மின்னல் பணியாளர்களிடம் ஒப்படைக்கலாம்.
இந்நிகழ்ச்சியில் சேகரிக்கப்படும் புத்தகங்கள் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

