
கோலாலம்பூர் ஜூன் 12-
மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டிருக்கும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் அழைப்பின் பேரில் வோங் இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக நேற்று மலேசியா வந்தடைந்தார்.மே 15-ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்ற பிறகு லாரன்ஸின் மலேசியாவுக்கான முதல் பயணம் இதுவாகும்.
வோங் மற்றும் அவரது மனைவி Loo Tze Lui ஆகிய இருவரும் ஶ்ரீ பெர்டானாவில் இன்று மதியம் 1 மணிக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரைச் சந்தித்தனர்.
மேலும், இந்தச் சந்திப்பில் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ப்ரி அப்துல் காடீர் மற்றும் துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ முஹம்மத் அலாமின் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

